1623706_769100359784579_195909062_nமதம் மாறிய யுவன்சங்கர்ராஜா..!
மனம் மாறாத இளையராஜா…!

இளையராஜா குடும்பத்தில் புயல் வீசிக்கொண்டிருக்கிறது…!

காரணம்…மதம் மாறி யுவன்சங்கர்ராஜா செய்து கொண்ட 3-ஆவது திருமணம். இந்த செய்திதான் இணையத்தளங்களில் வெளியாகி பலராலும் ஆச்சர்யத்துடன் பார்க்கப்படும் செய்தி. இதோ இன்று வெளியான செய்தி

34 வயதே ஆன யுவன்சங்கர்ராஜாவின் வாழ்க்கையில் 3 திருமணங்கள் செய்து கொள்ளுமளவுக்கு பிரச்சனைக்கு மேல் பிரச்சனை..!

யுவன்சங்கர்ராஜாவின் முதல் திருமணம் நடந்தது 2005 ஆம் ஆண்டு மார்ச் 21 ஆம் தேதி…!

2002ல் லண்டனுக்கு கலை நிகழ்ச்சி நடத்த சென்றபோது அங்கே அறிமுகமானவர் சுஜயா சந்திரன்.

நட்பு பிறகு காதல் என்று மூன்று வருட பழக்கத்துக்குப் பிறகு 2005 ல் சுஜயாவை திருமணம் செய்தார் யுவன்.

இவர்களின் திருமணம் சென்னையில் உள்ள, மேயர் ராமநாதன் ஹாலில் விமரிசையாக நடைபெற்றது.

யுவன் – சுஜயா திருமண வாழ்க்கை இரண்டு ஆண்டுகளுக்கு மேல் நீடிக்கவில்லை.

சிம்பு உடன் சேர்ந்து கொண்டு தவறான பழக்கத்துக்கு அடிமையானதாக சொல்லி 2007, ஆகஸ்ட்டில் விவாகரத்துக்கு விண்ணப்பித்தார்.

2008 ல் விவாகரத்து கிடைத்ததும் லண்டனுக்கே திரும்பிச் சென்றார் சுஜயா.

அவருக்கு செட்டில்மெண்ட்டாக நுங்கம்பாக்கத்தில் உள்ள தன்னுடைய 3 பெட்ரூம் ப்ளாட்டையும், கணிசமான தொகையையும் யுவன் கொடுத்ததாக அப்போது சொல்லப்பட்டது.

அதன் பிறகு ஷில்பா மோகன் என்ற பெண்ணை 2011 ஆம் ஆண்டு, செப்டம்பர் 1 ஆம் தேதி இரண்டாவதாக திருமணம் செய்தார் யுவன். இந்தத் திருமணம் திருப்பதியில் நடைபெற்றது.

சுஜயாவைப் போலவே ஷில்பாவும் வெளிநாட்டைச் சேர்ந்தவர்தான்.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மோகன் என்ற தொழில் அதிபரின் மகளான ஷில்பா, அங்குள்ள யுனிவர்சிட்டி ஆப் அடிலெய்டில் பி.பார்ம் படித்தவர்.

இவரும் முதலில் தோழியாகி, பிறகு காதலியாகி பிறகு மனைவியானவர்.

யுவன் – ஷில்பா மணவாழ்க்கையும் அதிக நாட்கள் நீடிக்கவில்லை.

இருவருக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக யுவனுக்கு குட்பை சொல்லிவிட்டு ஆஸ்திரேலியாவுக்கு போய்விட்டாராம் ஷில்பா.

மனைவி பிரிந்துபோன துயரத்தில் இருந்த யுவனுக்கு அடுத்த அடி.. அவரது அம்மாவின் மறைவு.

போதாக்குறைக்கு, அப்பா இளையராஜாவின் போக்கினாலும் வெறுப்படைந்த யுவன்சங்கர்ராஜா மனஅழுத்தத்தினால் வாழ்க்கையை வெறுத்திருந்த நேரத்தில், அவரது நண்பரின் மூலம் இஸ்லாம் மதத்துக்கு மாறி இருக்கிறார் யுவன்.

தன் பெயரையும் அப்துல்லா என்று மாற்றிக் கொண்டு, அண்மையில் ஒரு முஸ்லீம் பெண்ணை 3 ஆவதாக திருமணமும் செய்து கொண்டிருக்கிறார்.

யுவன் இஸ்லாம் மதத்துக்கு மாறியதையும், முஸ்லீம் பெண்ணை 3 ஆவதாக திருமணம் செய்து கொண்டதையும் இளையராஜா ஏற்க மறுத்துவிட்டதோடு, யுவனோடு இனி ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்ற முடிவுக்கும் வந்துவிட்டாராம்.

வெங்கட்பிரபு, பிரேம்ஜி போன்றவர்கள் யுவனுக்கு ஆதரவாக இளையராஜாவை சமாதானப்படுத்த முயற்சி செய்திருக்கின்றனர்.

மதம் மாறிய யுவன்சங்கர்ராஜாவை மன்னிக்கத் தயாரில்லை என்று சொல்லிவிட்டாராம் மனம் மாறாத இளையராஜா…!

இவ்வாறு செய்தித்தளங்கள் செய்திகளை வெளியிட்டுள்ள நிலையில் தனக்கு 3ஆவது திருமணம் நடைபெறவில்லை, தந்தைக்கும் எனக்கும் எவ்வித வாக்குவாதமும் இல்லை என்றும் “அப்துல்லாஹ்” என்று தனது பெயரி மாற்றி இஸ்லாத்தில் இணைந்த யுவன் ஷங்கர் ராஜா தனது twitter தளத்தில் இன்று தெரிவித்துள்ளார். எது எவ்வாறோ நான் இப்போது இஸ்லாத்தில் இணைந்துவிட்டேன் என்றும் தனது கருத்தை அவர் அங்கு வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s